--> -->

கங்கொடவில சமாதி விகாரை தூபியின் ‘கோபுர கலசத்தை’ பாதுகாப்பு செயலாளர் திரை நீக்கம் செய்துவைத்தார்

டிசம்பர் 05, 2022

நுகேகொட கங்கொடவில சமாதி விகாரையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சைத்திய (தூபி) பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவினால் டிசம்பர் 03 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
 
மகா சங்கத்தினரின் சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புதிய தூபியின் மீது வைக்கப்பட்டுள்ள ‘கோபுர கலசம்’ சுப தருணத்தில் ஜெனரல் குணரத்னவினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
 
விஹாரையின் பிரதம விஹாராதிபதி வண. மெடில்லே பஞ்ஞாலோக தேரரின் அழைப்பின் பேரில், பாதுகாப்புச் செயலாளர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, வீரம் மிக்க வீரர்களின் நினைவாகவும், அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் சமய ஆசீர்வாதங்களைப் பெறவும் தூபியினை அலங்கரிக்கும் விலையுயர்ந்த ‘கோபுர கலசம்’ அவரால் வழங்கப்பட்டது.
 
விஹாராதிப தேரரின் ஆலோசனையின்படி, இலங்கையின் பாரம்பரியங்கள் மற்றும் சமய சடங்குகளுக்கு மத்தியில் தூபிகளைத் திரை நீக்கம் செய்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
 
இந்த உன்னத நோக்கத்திற்கு ஆதரவளிக்க இலங்கை கடற்படையினர் தங்களது தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உழைப்பை வழங்கியுள்ளனர்.
 
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டு இலங்கையர்களான ஹிரண்ய தர்மபால மற்றும் சஞ்சய் ரணவீர ஆகியோர் இந்த உன்னத திட்டத்திற்கான நிதியுதவியை வழங்கியுள்ளனர்.
 
இந்த சமய நிகழ்வைக் குறிக்கும் வகையில், அனுசரணையாளர்களால் பிரதம அதிதியான ஜெனரல் குணரத்னவிற்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
 
கோபுர கலசத்தின் பாரம்பரிய திரை நீக்கம் செய்து வைக்கும் விழாவைக் காண மகா சங்க உறுப்பினர்கள், திட்டத்தின் அனுசரணையாளர்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்களும் இந்த சமய நிகழ்வில் கலந்து கொண்டனர்.