--> -->

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்
நடனம் மற்றும் இசைக் குழுக்கள் சாம்பியனாக தெரிவு

டிசம்பர் 06, 2022

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) நடனம் மற்றும் இசைக் குழுக்கள் ஆசிய பசிபிக் தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் (APIIT) மாணவர் கழகத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட 'TANTALIZE-2022' பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான திறமைப் போட்டியில் மூன்று முக்கிய பிரிவுகளில் சாம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
 
கொழும்பு நெலும் பொகுன மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கில் இப்போட்டி நடைபெற்றது.
 
நடனக் குழு சோலோ மற்றும் குழு நடனம் பிரிவுகளில் முதல் இடங்களை வென்றதுடன், அதே நேரத்தில் இசைக் குழு பாடல் பிரிவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளதாக பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.