--> -->

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி பாதுகாப்பு செயலாளரை சந்திப்பு

டிசம்பர் 08, 2022

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய இன்று (டிசம்பர் 08) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று நிகழ்ந்தது.

இதன் போது ஜெனரல் குணரத்ன மேஜர் ஜெனரல் வீரசூரியவிற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன், அவரின் புதிய நியமனத்தில் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் வீரசூரிய, இலங்கை இராணுவத்தின் 61வது தலைமை அதிகாரியாக நவம்பர் 29ஆம் திகதி (2022) நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.