--> -->

5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையினரால் நன்கொடையாளர்களின்
ஆதரவுடன் வறிய குடும்பத்திற்கு புதிய வீடு

டிசம்பர் 12, 2022

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 66 வது காலாட் படைப்பிரிவின் 661 வது காலாட் பிரிகேடின் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர் நன்கொடையாளரின் அனுசரணையுடன் செல்லிபுரம் கொல்லகராச்சி கிராம சேவை பிரிவில் முறையான வீடு இல்லாத குடும்பத்திற்கு 3 டிசம்பர் 2022 அன்று அவருக்கான புதிய வீட்டை நிர்மாணித்து பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

66 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜானக பிரியதர்ஷன அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 661 வது காலாட் பிரிகேட் படையினருடன், 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர் இணைந்து நன்கொடையாளரின் ஆதரவுடன் இந்த நிர்மாண பணிகளை முன்னெடுக்க தமது தொழில்நுட்பம் நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை பயன்படுத்தினர்.

வடக்கில் உள்ள இராணுவத் படையினர் தற்போது சமூக நலம் சார்ந்த பல திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர், அதே வேளை வறியவர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதில் முன்னுரிமை அளித்து, இராணுவத்தின் மீது முழு நம்பிக்கையும், இவ்வாறான திட்டங்களுக்கு அதன் ஆற்றலும் உள்ள நன்கொடையாளர்களின் ஆதரவைப் பயன்படுத்துகின்றனர்.
 
இந்து சமய மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பெறுநரான திரு அனோஜன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் திறப்பு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட 66 வது காலாட் படைபிரிவின் தளபதி அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களையும் திறப்புகளையும் வழங்கினார்.

அரச அதிகாரிகள், கிராமசேவை உத்தியோகத்தர், 661 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் நளின் செனவிரத்ன, அழைப்பாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி - www.army.lk