--> -->

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் டெல்லி' கப்பலானது திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

ஜனவரி 16, 2023

இந்திய கடற்படைக்கு சொந்தமான "ஐஎன்எஸ் டெல்லி" என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (ஜனவரி15 ) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இக் கப்பலானது சுமார் 163.2 மீற்றர் நீளம் கொண்டதாகும்.  கெப்டன் ஷிராஸ் ஹுசைன் ஆசாத் கட்டளை வழங்கும் இந்த கப்பலில் 390 இந்திய கடற்படை வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

கப்பலின் கட்ளை தளபதி கெப்டன் ஷிராஸ் ஹுசைன் ஆசாத் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரால் தம்மிக்க குமார ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (ஜனவரி 16) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது எனவும்  கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்திய கடற்படையின் "ஐஎன்எஸ் டெல்லி" கப்பலானது இலங்கை கடற்படையுடன் பயிற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுவதுடன் வருகை தந்துள்ள இந்திய கடற்படைக் கப்பல் எதிர்வரும் 17 ஆம் திகதி (ஜனவரி 17) இலங்கையிலிருந்து புறப்படவுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.