--> -->

மாணவர் படையணியின் புதிய பணிப்பாளர் இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

ஜனவரி 25, 2023

தேசிய மாணவர் படையணியின் (NCC) புதிய பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.எஸ். பொன்சேகா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரேமித பண்டார தென்னகோன் அவர்களை இன்று (ஜனவரி 25) கொழும்பிலுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது, ஜனாதிபதியின் பணிப்புரையின்படி வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளையும் ஒன்றிணைத்து மாணவர் படையணி பயிச்சியினை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளரிடம் கேட்டுக்கொண்ட இராஜாங்க அமைச்சர், அவர்களின் பயிற்சியில் மொழித்திறன் மேம்பாடு, ஆளுமை அபிவிருத்தி மற்றும் ஒழுக்க விழுமிய மேம்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பிரிகேடியர் பொன்சேகா தேசிய மாணவர் படையணியின் முதல் முறையாக இயக்குநராக நியமிக்கப்பட்ட சேவையிலிருக்கும் இராணுவ அதிகாரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின் முடிவில் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரிகேடியர் பொன்சேகா இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டார்.