--> -->

இராணுவத்தினரால் வறிய மாணவர்களுக்கு நிவாரண உதவிகள்

பெப்ரவரி 10, 2023

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இலங்கை இராணுவத்தினரால் வட பிராந்தியத்தில் உள்ள உடையார் கட்டில் உள்ள மாணவர்களுக்கு புதிய காலணிகள் அண்மையில் (பெப்ரவரி 05) வழங்கப்பட்டது.

68வது காலாட்படை பிரிவின் 682 காலாட் படைப்பிரிவின் 6வது இலங்கை தேசிய காவல் படையினரால் இந்த தேவையுடைய குழந்தைகளை அணுகுவதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் நிதி உதவிகளை வழங்கியதாக இராணுவ தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த மாணவர்கள் முகாம் வளாகத்திற்கு அழைக்கப்பட்டு ரூபா 3,500.00 மதிப்பிலான ஜோடி காலணிகள் வழங்கப்பட்டது.

682வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சமிந்த கலப்பத்தியின் பணிப்புரையின் பேரில் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ.எம்.டி.எஸ் திஸாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் இந்த சமூக சேவை முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61வது காலாட் படைப்பிரிவின் 613வது காலாட் பிரிகேட் படையினர் திங்கட்கிழமை (பெப்ரவரி 06) கம்புருபிட்டிய, பமுனுகம பிரதேசத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளால் மோசமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆதரவற்ற குடும்பத்திற்கு ரூபா 30,000.00 பெறுமதியான உலர் உணவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

இதற்காக இராணுவத்தினரின் சொந்த நிதி பயன்படுத்தப்பட்டது.

613வது காலாட்படை படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் மேற்கு பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.