--> -->

சட்டவிரோதமாக சுறா மீன் மற்றும் துடுப்புகளை வைத்திருந்த நபர் கரையோர பாதுகாப்பு படையினரால் கைது

பெப்ரவரி 13, 2023

இலங்கை கரையோர பாதுகாப்பு படையினர் நேற்று (12) டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட சுறா மீன் மற்றும் துடுப்புகளை வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மீன்பிடி கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் கடமைகளுக்காக டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள இலங்கை கரையோர பாதுகாப்பு படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக பெறப்பட்ட சுறா மீன்கள் மற்றும் துடுப்புகளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததாக இலங்கை கரையோர காவல்படை தெரிவித்துள்ளது.

இதன்படி, சட்டவிரோதமான பொருட்களை மீன்பிடி படகில் இருந்து இறக்கும் போது (41 கிலோ உலர்ந்த சுறா மீன் மற்றும் 9.8 கிலோ உலர்ந்த சுறா துடுப்புகள்) இவ்வாரு கைப்பற்றப்பட்டன.

மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களச் சட்டம் 1996 எண். 02 ஆணை எண். 4 இற்கமைய, ‘எந்த சுறா இனத்தின் பாகங்களையும்’ தன்வசம் வைத்திருத்தல், கொண்டுசெல்லல் அல்லது தரையிறக்குதல் ஆகியவை குற்றமாக கருதப்படும்.

கைது செய்யப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் டிகோவிட்ட கடற்றொழில் பரிசோதகரிடம் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டார்.