--> -->

இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ‘விரு சிசு பிரதீப’ திட்டத்தின் கீழ் உதவித்தொகைகள் வழங்கிவைப்பு

பெப்ரவரி 24, 2023

உயிரிழந்த மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் இராணுவ குடும்பங்களுக்கு கல்வி நிவாரணம் வழங்கும் நோக்கில் இராணுவ சேவா வனிதா பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட 'விரு சிசு பிரதீப' புலமைப்பரிசில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இராணுவத் தலைமையகத்தில் (பெப்ரவரி  23) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது, 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூபா 25,000 பெறுமதியான உதவித்தொகைகள் பரிசாக வழங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பரிசுகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதற்கமைய, உயிரிழந்த மற்றும் மாற்றுத்திறனாளிகளான இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
 
தேசிய பாதுகாப்பு நிதியம் மற்றும் இலங்கை வங்கி (BOC) இணைந்து இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அனுசரணை வழங்கியுள்ளதாக இராணுவ தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.