--> -->

இலங்கை கடலோரப் பாதுகாப்புபடை அதிக கடலாமை குஞ்சுகளை கடலில் விடுவித்தது

மார்ச் 22, 2023
  • இலங்கை கடலோரப் பாதுகாப்புபடையின் கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 8000க்கும் மேற்பட்ட கடலாமை குஞ்சுகளை கடலுக்கு விடுவித்துள்ளது.

இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினர் ஆமை முட்டைகளை பாதுகாத்து 2600க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகளை கடலில் விடுவித்ததாக கடலோரப் பாதுகாப்புபடை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு மார்ச் 13 முதல் 19 வரையிலான காலப்பகுதியில் 2526 கடல் ஆமை முட்டைகள் மீட்கப்பட்டு மிரிஸ்ஸ, தெஹிவளை, ஹிக்கடுவ, பாணந்துறை, வெள்ளவத்தை மற்றும் காலி முகத்திடலில் இருந்து மொத்தம் 2621 ஆமை குஞ்சுகள் கடலுக்கு விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினரின் ஆமை பாதுகாப்பு திட்டத்தின் (CGTCP) கீழ் இதுவரை 39770 ஆமை முட்டைகளை பாதுகாத்து இந்த ஆண்டில் மட்டும் 8043 குஞ்சுகளை கடலில் விடுவித்துள்ளது.