--> -->

கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியை வழங்கும் வைகயில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ரிவர்ஸ் ஓஸ்மோசிஸ் (RO) ஆலை ஒன்றை நிறுவியது

ஏப்ரல் 18, 2023

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு தனது சமூக சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், சீகிரியா, அலகொலவெவ கிராமத்தில் வசிப்பவர்கள் மற்றும் அலகொலவெவ ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதியை வழங்கும் ரிவர்ஸ் ஓஸ்மோசிஸ் (RO) ஆலையை சமீபத்தில் நிறுவியது.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கட்டப்பட்ட ரிவர்ஸ் ஓஸ்மோசிஸ் ஆலை அதன் பயனாளிகளுக்கு அண்மையில் (ஏப்ரல் 10) வழங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு இலங்கை விமானப்படை தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழிலாளர்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற விவகாரங்கள் பிரிவின் மேலதிக செயலாளர் திருமதி இந்திகா விஜேகுணவர்தன, சிகிரிய இலங்கை விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சமிந்த ஹேரத், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஏ.ரி. கணேஷ், பாடசாலை மாணவ மாணவிகள் மற்றும் கிராம மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.