--> -->

பங்களாதேஷ் பாதுகாப்பு கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜூன் 22, 2023


பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பைசுர் ரஹ்மான் அவர்கள் இன்று (ஜூன் 22) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சிச்சுக்கு வருகை தந்த  பங்களாதேஷின் கட்டளைத் தளபதி அவர்களுக்கு பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெனரல் குணரத்ன மற்றும் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பைசுர் ரஹ்மான் ஆகியோரிக்கிடையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இருதரப்பு பரஸ்பர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதரவும்  இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.