--> -->

இராணுவத்தினரால் முல்லைத்தீவு மக்களுக்கு கண் சிகிச்சை முகாம் மற்றும் மூக்குகண்ணாடி வழங்கல்

ஆகஸ்ட் 16, 2023

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவு படையினரால் ஞாயிற்றுக்கிழமை (13 ஓகஸ்ட்) உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் கண் மருத்துவ சிகிச்சை முகாமின் போது பல்வேறு பார்வை குறைபாடுகள் மற்றும் கண் நோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 464 பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பு கிடைத்தது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இடையே நல்லுறவு மற்றும் சிவில் உறவுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம், சமூக மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர். அசேல அபேதீர அவர்களின் குழு மற்றும் 68 வது காலாட் படைப்பிரிவின் அதிகாரிகள் உட்பட 40 பேர் கொண்ட படையினர் குழுவுடன் நடாத்தப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலையில் 139 பொதுமக்களின் கண்புரை சத்திரசிகிச்சைகளுக்கு அனுசரணை வழங்குவதோடு 100 வாசிப்புக் கண்ணாடிகளை ஆர்ஆர் (இங்கிலாந்து) தலைவர் வைத்தியர் வி.சர்வேஸ்வரன் மற்றும் தாய்லாந்தின் சூசி.பௌத்த நல அறக்கட்டளையின் இலங்கைப் பிரதிநிதி திரு. அரோஷ பரணவிதான ஆகியோரால் அனுசரணை வழங்கப்பட்டது.

கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு மருத்துவ முகாமுக்கு வந்தவர்களை பரிசோதித்ததுடன், நோயாளிகளை தேவையான மேலதிக ஆலோசனைகளுக்கு பரிந்துரைத்தனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு மற்றும் 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

681 வது காலாட் பிரிகேட் தளபதி, 682 வது காலாட் பிரிகேட் தளபதி, கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த சமூகத் திட்டத்தில் பங்குபற்றினர்.

நன்றி - www.army.lk