--> -->

இலங்கை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தனது 17வது ஆண்டு
நிறைவைக் கொண்டாடுகிறது

செப்டம்பர் 15, 2023

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தனது 17வது ஆண்டு நிறைவை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் சேனக பியான்வில தலைமையில் அதன் தலைமையக வளாகத்தில் செப்டம்பர் 13ஆம் திகதி கொண்டாடியது.

இதனையொட்டி சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் போர்வீரர்கள், அதன் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் வகையில் மோல்பே ஸ்ரீ கங்காராம விகாரையில் சம்புத்த பூஜை மற்றும் பிரித் ஓதுதல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட யுத்தகாலத்தின் போது பங்கரவாதிகளினால் அச்சுறுத்தப்பட்ட கிராமங்களைப் பாதுகாப்பதற்காக 1980ஆம் ஆண்டு நடுப்பகுதியில் உருவாக்கப்பட்ட ‘தேசிய ஊர்க்காவல் படை’யானது, பின்னர் 2006ஆம் ஆண்டில் ‘சிவில் பாதுகாப்புத் திணைக்களமாக’ அதன் உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்டது.

மேலும் யுத்தகாலத்தின் போது, 545 சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளதுடன், 423 பணியாளர்கள் ஊனமுற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.