--> -->

பதில் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின்
பங்குதாரர் இரவு - 2023 நிகழ்வில் பங்கேற்பு

செப்டம்பர் 15, 2023

பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் நேற்று (14) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்குதாரர் இரவு – 2023 நிகழ்வில் கலந்து கொண்டார்.

அண்மைக்காலமாக நாடு பூராகவும் பரவிவரும் டெங்கு நோய்க்கு எதிராக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னார்வ முயற்சிகளை பாராட்டுவதாக இந்நிகழ்வில் உரையாற்றிய பதில் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், முன்னாள் உள்விவகார அமைச்சர் திரு. வஜிர அபேவர்தன, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்ப உபதலைவர் திரு. ஜகத் அபேசிங்க மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கௌரவ உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.