--> -->

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கடற்படையினரால் கரையோர சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

செப்டம்பர் 18, 2023

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக இலங்கை கடற்படையினரால் செப்டம்பர் 16ஆம் திகதி துறைமுக நகரப் பகுதியின் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு, இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினமானது ஒட்டுமொத்த இயற்கையின் தூய்மை மற்றும் தூய்மையைக் கொண்டுவருவதற்கான ஒரு செயற்பாடாகும். மேற்படி தினமானது கடல்சார் மாற்றம்' என்ற கருப்பொருளின் கீழ், பிளாஸ்டிக் மாசடைதலை மையமாகக் கொண்டது.

கொழும்பு துறைமுக நகரப் பகுதி கடற்கரையின் கவர்ச்சியை பாதுகாக்கும் வகையில், கரையோரங்களில் அதிக அளவில் காணப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் பைகள், மற்றும் உக்காத கழிவுப் பொருட்கள் ஆகியன கடற்படையினரால் தூய்மைப்படுத்தப்பட்டது.