--> -->

கொவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சிற்கு சீன தூதரகம் ரூ.25 மில்லியன் நன்கொடை

டிசம்பர் 17, 2020

கொவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்  இராணுவ வீரர்களுக்கு  தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்துவதற்காக இலங்கைக்கான சீன தூதரகம் இம்மாதம் 15ம் திகதி பாதுகாப்பு அமைச்சுக்கு 25 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது.

பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புரைக்கமைய, இந்த நன்கொடையானது கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்கான துரித நடவடிக்கைக்காக வழங்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் சீன மக்கள்  இராணுவம்  சார்பாக , சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் வான் டாங் இந்த நன்கொடைகளை வழங்கி வைத்தார்.

இலங்கையில் கொவிட்-19 தொற்று நோய்க் காலத்தில் சீனதூதரகம் இலங்கை இராணுவத்திற்கு பல வழிகளிலும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.