--> -->

அமெரிக்க கடற்படை கப்பல் ‘USNS Brunswick’ கொழும்பு வந்தடைந்தது

ஒக்டோபர் 12, 2023

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'யுஎஸ்என்எஸ் பிரன்ஸ்விக்' (USNS Brunswick) என்ற கப்பல் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நேற்று (ஒக்.11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த 103 மீட்டர் நீளமுள்ள ஸ்பியர்ஹெட் கிளாஸ் வேக போக்குவரத்து ஆராய்ச்சிக் கப்பலில் 24 பணியாளர்கள் உள்ளனர்.  இது ஞாயிற்றுக்கிழமை (ஒக்.15) இலங்கையிலிந்து புறப்பட உள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.