--> -->

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இராணுவத்தினரால் போக்குவரத்து வசதிகள் முன்னெடுப்பு.

ஒக்டோபர் 16, 2023

வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ள ஆறு பாடசாலைகளில் இருந்து  நேற்று (ஒக்.15) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் 22 மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடுகளை  செய்து கொடுத்தனர்.

61 ஆவது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.ஏ.ஜே.என் ரணசிங்க அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, 61ஆவது காலாட்படை பிரிவு மற்றும் 9ஆவது இலங்கை சிங்கப் படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் இராணுவத்தின் யுனி-பஃபல்ஸ், படகுகள், கெப்கள் மற்றும் ட்ரக்குகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்கியதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், மாத்தறை ஹிட்டெட்டிய ரஜமஹா விகாரையில் தற்காலிகமாக வசிக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 72 குடும்பங்களைச் சேர்ந்த 242 குடும்ப அங்கத்தவர்களுக்கு 200 சானிட்டரி நாப்கின் பொதிகள் மற்றும் 1000 குடிநீர் போத்தல்களும்  காலி சித்துஹத் அறக்கட்டளையின் வென் கஹாகொல்லே சோமரதன தேரர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.