--> -->

இலங்கை கடற்படையினரால் அனுராதபுரத்திலுள்ள தூபாராமய விகாரையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது

ஒக்டோபர் 19, 2023

அனுராதபுரத்திலுள்ள தூபாராமய விகாரையில் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட புதிய RO (Reverse Osmosis) நீர் சுத்திகரிப்பு நிலையம் புதன்கிழமை (ஒக்.18) திறந்துவைக்கப்பட்டது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் தனவந்தர்கள் பங்களிப்புடன் கடற்படையினரால்   நிர்மாணிக்கப்பட்ட  இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் இங்கு வருகை தரும் பக்தர்களின் உபயோகத்திற்காக  சுமார் 15000 லீட்டர் தூய குடிநீரினை பெற்றுக்கொள்ள முடியும்   என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க தூபாராமய விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களினால் வைபவ ரீதியாக  திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிலையம் அலங்களாக கடற்படையினர் மொத்தமாக 983 RO குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நாடளாவிய ரீதியில் நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் மகா சங்க உறுப்பினர்கள் உட்பட அடமஸ்தானாதிபதி, நுவரகலாவிய பிரதம சங்கநாயக்க, வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர், துபாராமய பீடாதிபதி வணக்கத்துக்குரிய கஹல்லே கனிநந்த தேரர் மற்றும் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.