--> -->

அமெரிக்கத் தூதுவர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

ஒக்டோபர் 28, 2023

இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 27) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த அமெரிக்க தூதுவர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால ஒத்துழைப்பையும் இருதரப்பு உறவுகளையும் மேலும் மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இந்த சந்திப்பின் போது சுமுகமாக கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. ஹர்ஷ விதானராச்சி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.