--> -->

கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் மாணவி நீச்சல் போட்டியில் சாதனை

நவம்பர் 01, 2023

அகில இலங்கை தேசிய பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் நீச்சல் விளையாட்டு போட்டியை 2:45:69 நிமிடங்களில் பூர்த்தி செய்து கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மாணவி புத்திமா சமாதி தம்சரணி சேனாரத்ன புதிய சாதனை படைத்துள்ளார்.

மேலும் இம் மாணவி இந்த சாம்பியன்ஷிப்பில் 50 மீற்றர் மற்றும் 100 மீற்றர் ஆகிய இரண்டிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை உயிர்காப்பு சங்கம் நடத்திய தெற்காசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், 18 வயதுக்குட்பட்ட 50 மீற்றர் மற்றும் 200 மீற்றர் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றதோடு, 100 மீற்றர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

மேலும் 2023 மேல் மாகாண நீச்சல் சாம்பியன்ஷிப்பில், 18 வயதுக்குட்பட்ட 200 மீற்றர் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 50 மீற்றர் மற்றும் 100 மீற்றர் போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் தன்வசம் ஆக்கிக் கொண்டார்.

2014ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற தேசிய ரீதியிலான நீச்சல் போட்டிகளில் 10 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 24 பதக்கங்களை புத்திமா வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.