--> -->

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் KRI DIPONEGORO- 365 இலங்கையை வந்தடைந்தது

டிசம்பர் 22, 2023

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு, இந்தோனேசிய கடற்படைக் கப்பல் KRI DIPONEGORO- 365 நேற்று (டிச. 21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இலங்கைக்கு வருகை தந்த இந்தோனேசிய கடற்படைக் கப்பலுக்கு பாரம்பரிய முறைமைகளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினரால் வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது.

90.71 மீ நீளமுள்ள KRI DIPONEGORO- 365, 120 கடற்படை வீரர்களைக் கொண்ட ஒரு IDN கோர்வெட் ரக போர்க்கப்பல் ஆகும்.

இக்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் கடற்படை குழுவினர் பல உள்ளூர் சுற்றுலாத் தலங்களை பார்வையிட செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கப்பல் இலங்கையிலிருந்து சனிக்கிழமையன்று (டிச. 23) வெளியேற உள்ளது.