--> -->

ஜப்பானிய அமைச்சரை இராஜாங்க அமைச்சர் தென்னகோன் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார்

ஜனவரி 13, 2024

இலங்கைக்கான  உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பும் ஜப்பானின் நிதியமைச்சரும், நிதிச் சேவைகள் இராஜாங்க அமைச்சரும், நிதி துஷ்பிரயோகத்திற்கு பொறுப்பான அமைச்சருமான திரு. சுசுகி ஷுனிச்சி  அவைகளை இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் உத்தியோகபூர்வமாக நேற்று (ஜனவரி 12) வழியனுப்பி வைத்தார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனவரி 11ஆம் திகதி இலங்கை வந்த அமைச்சர் ஷுனிச்சி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் கௌரவ அலி சப்ரி உட்பட பல்வேறு இராஜதந்திர அதிகாரிகளுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.

மேலும், ஜப்பானிய அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் பாராளுமன்றம், ஜே.ஆர்.ஜயவர்தன மையம், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை, கொழும்பு கப்பல்துறை மற்றும் மஹரகமவில் உள்ள லங்கா நிப்பான் பிஸ்டெக் நிறுவனம் ஆகிய இடங்களுக்கும் உத்தியோகபூர்வ விஜயங்களை  மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.