--> -->

இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

மார்ச் 28, 2024

இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச் 28) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த கடற்படையின் பிரதம அதிகாரி பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அத்துடன் கடற்படை பிரதம அதிகாரியின் புதிய நியமனத்தில் வெற்றிபெற பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு செயலாளர் மற்றும் கடற்படையின் பிரதம அதிகாரி ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.