--> -->

தேசிய நீர்வரைவியல் சபைக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

ஏப்ரல் 01, 2024

தேசிய நீர்வரைவியல் சபையின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 1) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இவர்களுக்கான நிமனக் கடிதங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வழங்கிவைத்தார்.

2024ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க தேசிய நீர்வரைவியல் சட்டத்தின் கீழ் தேசிய நீர்வரைவியல் சபை நிறுவப்பட்டது. தேசிய நீர்வரைவியல் சபையின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சிசிர ஜெயக்கொடி இன்று பாதுகாப்பு செயலாளரிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

மேலும், இந்த சபையின் ஏனைய உறுப்பினர்களான ரியர் அட்மிரல் (ஓய்வு) அசோக விஜேசிறிவர்தன மற்றும் ரியர் அட்மிரல் (ஓய்வு) பிரசாத் காரியப்பெரும ஆகியோரும் பாதுகாப்புச் செயலாளரிடம் இருந்து தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கடற்படையின் பிரதான நீர்வரைவியலாளர்களாகவும் மற்றும் அரசாங்கத்தின் கூட்டுப் பிரதான நீர்வரைவியலாளர்களாகவும் இந்த அதிகாரிகள் சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில்ரீதியாக நீர்வரைவியல் மற்றும் கடல் வரைபடவியல் ஆகியவற்றில் நன்கு தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் பதில் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) ஹர்ஷ விதானாராச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.