--> -->

இராணுவத்தின் 2020 -2025 ஆண்டுக்கான எதிர்கால வியூகம்

டிசம்பர் 22, 2020

இராணுவத்தின் 2020 -2025 ஆண்டுக்கான திட்டங்கள் அடங்கிய   இராணுவ வழி எதிர்கால வியூகம் 2020-2025 இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வு, பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதியின்  பிரதம ஆலோசகர் திரு. லலித் வீரதுங்கவின் முன்னிலையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கலந்து கொண்டார்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும்  இராணுவத் தளபதியுமான லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கமைய  சிவில் இராணுவ அறிஞர்களின் பங்களிப்புடன் பாதுகாப்பு துறையில் நவீனமயப்படுத்தலை உலகிற்கு இணையாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இராணுவ மூலோபாயத்தை மேம்படுத்தும் வகையிலும் இராணுவ வழி எதிர்கால வியூகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்போது,  ‘இராணுவ வழி எதிர்கால வியூகம் 2020-2025' பிரதிகளை விஷேட அதிதிகளுக்கும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்தர சில்வாவினால், திரு. லலித் வீரதுங்க மற்றும் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோருக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராணுவத்தின் பிரதம அதிகாரி  மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய, பிரதி இராணுவத்தின் பிரதம அதிகாரி , இலங்கை இராணுவ தொண்டர் படை தளபதி, பாதுகாப்பு படை தலைமையகங்களின் தளபதிகள் உள்ளிட்ட இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.