--> -->

யாழ்ப்பாணப் படையினர் தேவையுடைய இரு குடும்பங்களுக்கு
புதிய வீடுகள் நிர்மாணிப்பு

ஏப்ரல் 04, 2024

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகப் படையினர் மனித நலனில் அக்கறை காட்டி வரணி பிரதேசத்தில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு இரண்டு புதிய வீடுகளை அமைத்துக் கொடுத்தனர். புதிய வீடுகள் 02 ஏப்ரல் 2024 அன்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

திறப்பு விழாவின் போது, வீட்டு சாவிகள் யாழ் பாதுகாப்புப் படைத் தலையைக தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சி.பி விக்ரமசிங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களால் குடும்பங்களுக்கு அடையாளமாக கையளிக்கப்பட்டன.

மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், வடக்கு மாகாண சபையின் ஆளுநரின் செயலகம் இரு வீடுகளுக்கும் மூலப்பொருட்களுக்காக 1.8 மில்லியன் ரூபாவை ஒதுக்கியது. 11 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 7 வது விஜயபாகு காலாட் படையணி ஆகியவற்றின் படையினர் 5 வது பொறியியல் சேவைகள் படையணியின் தொழில்நுட்ப உதவியுடன் வீடுகளை நிர்மாணித்தனர்.

அதனைத் தொடர்ந்து, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி கில்லாலி மரியமதி பாலர் பாடசாலையின் சிறார்களுக்கு எழுதுப் பொருட்களை வழங்கினார். பின்னர், பிள்ளைகளுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு 23 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்விரு சந்தர்ப்பங்களிலும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அரச அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நன்றி  - www.army.lk