--> -->

துருக்கி தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜனவரி 01, 2021

இலங்கைக்கான துருக்கி தூதுவர் அதிமேதகு டெமெட் செகெர்சியோகுளு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது துருக்கி தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வின்போது நான்கு நட்சத்திர ஜெனரல் அந்தஸ்துக்கு அண்மையில் தரம் உயர்வு பெற்றதற்காக பாதுகாப்பு செயலாளருக்கு துருக்கி தூதுவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.