பாதுகாப்பு செயலாளர் பாகிஸ்தான் கடற்படைத் தளபதியை சந்தித்தார்
மே 02, 2025தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொத்தா (ஓய்வு) வியாழக்கிழமை (மே 01) பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரஃப் அவர்களை சந்தித்தார்.
பாதுகாப்பு செயலாளருடன் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) திரு. ஜயந்த எதிரிசிங்க, இலங்கை இராணுவ பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க மற்றும் இலங்கை விமானப்படை பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர ஆகியோரும் சமூகமளித்திருந்தார்கள்.