இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

மே 05, 2025

இலங்கை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) தலைவரான திருமதி. செவரின் சப்பாஸ், இன்று மே 05 கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொத்தாவை (ஓய்வு) சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, மனிதாபிமான விழுமியங்களை மேம்படுத்துவதிலும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் விதிகளை நிலைநிறுத்துவதிலும் ICRC யின் நீண்டகால மற்றும் முக்கிய பங்கை பாதுகாப்புச் செயலாளர் பாராட்டினார். அதனுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார்.

மனிதாபிமான நோக்கங்களை ஆதரிப்பதற்காக இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான ICRC யின் அர்ப்பணிப்பை சப்பாஸ் மீண்டும் உறுதிப்படுத்தினார். ICRC மற்றும் பாதுகாப்பு அமைச்சுற்கு இடையிலான ஆக்கபூர்வமான உறவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.