பாகிஸ்தான் NDU தூதுக்குழு இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்
மே 05, 2025பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (NDU) கொமடோர் முகமது அலி தலைமையிலான ஒரு குழு, இன்று மே 05 கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தது.
இந்த விஜயத்தின் போது, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொத்தா (ஓய்வு) அவர்களுடன் தூதுக்குழு ஒரு சுமூகமான சந்திப்பை நடத்தியது. இந்த கலந்துரையாடல்கள் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் துறையில் பரஸ்பர ஆர்வம் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான விடயங்களை மையமாகக் கொண்டிருந்தன.
இவ்விஜகியக்த்தின் போது, தேசிய புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியுடன் ஒரு கேள்வி-பதில் அமர்விலும் பங்கேற்றனர்.
இதன்போது பிராந்திய பாதுகாப்பு இயக்கவியல், பாதுகாப்பு கொள்கை மற்றும் பாதுகாப்பு கல்வியில் கூட்டு வாய்ப்புகள் குறித்த முன்னோக்குகளைப் பகிர்ந்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்னல் முகமது பாரூக்கும் கலந்து கொண்டார்.