பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரதி அமைச்சர் நியமிக்கப்பட்டார்

ஜூன் 11, 2025

ஜேர்மன் ஜனாதிபதி திரு. பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (ஜூன் 10) நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, நான்கு அமைச்சுகளுக்கான பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார்.

அதன்படி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.