வெளிச்செல்லும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
ஜூன் 20, 2025இலங்கையில் சேவையை நிறைவுசெய்து வெளியேறும் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (DA) Lieutenant Colonel Anthony C. Nelson, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (ஜூன் 20) பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இதன் போது, இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் Lieutenant Colonel Anthony C. Nelson ன் சேவைக்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு தெரிவித்தார். மேலும் பரஸ்பர நலன் மற்றும் பாதுகாப்புத் துறையில் தற்போதைய ஒத்துழைப்பு குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் முடிவில் நினைவுச்சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியும் கலந்துக் கொண்டார்.