புதிய இராணுவ பிரதம அதிகாரி பதவியேற்பு
ஜூன் 27, 2025இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் D K S K தோலகே USP nps psc, இலங்கை இராணுவத்தின் 67வது பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வியாழக்கிழமை (ஜூன் 26) இராணுவத் தலைமையகத்தில் தனது புதிய பதவியில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.
அனுபவமிக்க ஒரு சிரேஷ்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் தோலகே, Sri Lanka Army Volunteer Force கட்டளை தளபதி, பாதுகாப்புப் படைகளின் தளபதி (மத்திய) மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) கட்டளை தளபதி உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.