பாதுகாப்பு தலைமையக வளாக நிர்மாணம திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மதிப்பாய்வு
ஜூலை 01, 2025பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் நிர்மாண திட்டம் குறித்த உயர்மட்ட மதிப்பாய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 1, 2025) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில், நிர்மாண முன்னேற்றத்தை மதிப்பிடுதல், செயல்படுத்தலுடன் தொடர்புடைய சவால்களை எதிர்கொள்வது மற்றும் வேலைகளின் உரிய நேரத்தில் நிறைவேற்றல், தொடர்பன நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்திய பாதுகாப்பு செயலாளர், அனைத்து தரப்பினரும் உயர்ந்த தர நிர்ணயங்களுக்கு அமைய வேலைகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
இதன்போது முப்படைத் தளபதிகள் திட்டத்திற்காக வழங்கி வரும் தங்கள் ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் மற்றும் திட்ட அதிகாரிகள் பலரும் இதில் கலந்துக்கொண்டனர்.