சர்வதேச ஆராய்ச்சி மாநாடு (KDU IRC) 2025

ஜூலை 03, 2025

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், '‘Bridging Frontiers: Interdisciplinary Research for Sustainable Progress’,' என்ற தலைப்பில் அதன் 18வது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டை (KDU IRC-2025) செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1, 2025 ஆகிய திகதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த மாநாட்டிற்காக தமது ஆராய்ச்சி ஆக்கங்களை சமர்ப்பிக்க சமர்ப்பிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. சமர்ப்பிப்பதற்கான கடைசி திகதி ஜூலை 07, (2025) ஆகும்.

இவ்வருடாந்த KDU IRC மாநாடு பல்வேறு துறைகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு முதன்மையான தளமாக அமைந்துள்ளது. இந்த மாநாடு ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடவும், சமகால உலகளாவிய சவால்களை தொடர்பில் ஆராய்ச்சியை தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஆண்டு மாநாடு, இடைநிலை ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், நிலையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட புதுமையான அணுகுமுறைகளை ஊக்குவிப்பதற்கும் நோக்கமகாக கொண்டு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள், மேலாண்மை, சமூக அறிவியல் மற்றும் மனிதநேயம், சட்டம், கட்டமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் இடஞ்சார்ந்த அறிவியல், கணினி, பொறியியல், மருத்துவம், அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார அறிவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி ஆக்கங்களை இதற்காக சமர்ப்பிக்கலாம்.

பல்கலைக்கழகங்களின் தீவிர பங்கேற்பு KDU IRCயின் வெற்றியை பெரிதும் மேம்படுத்தும் அத்துடன், இதற்கு கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கலின் பங்களிப்பை வரவேற்பதற்கும், நிலையான முன்னேற்றத்திற்கான அறிவை கூட்டாக மேம்படுத்துவதற்கும் பல்கலைக்கழகம் எதிர்பார்க்கிறது.