அமெரிக்க தூதகரத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

ஜூலை 03, 2025

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் Matthew House, இன்று (ஜூலை 03) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, இருவரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பரஸ்பர புரிதலை வளர்த்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஒரு சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மை மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துவதில் இந்த சந்திப்பு ஒரு முக்கியமான படியாகும்.

புதிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருக்கு பாதுகாப்பு செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் கூட்டாண்மைக்கு நன்றி தெரிவித்தார்.

இந்து-பசுபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட நோக்கத்தை இந்த சந்திப்பு மேலும் வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியும் கலந்து கொண்டார்.