பாதுகாப்பு பிரதி அமைச்சர் இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் மற்றும் போலகலை முன்னாள் படைவீரர் இல்லத்திற்கு விஜயம்

ஜூலை 13, 2025

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம் (SLESA) மற்றும் போலகலை படைவீரர் இல்லம் ஆகியவற்றிற்கு விஜயம் செய்தார். இவ்விஜயம் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலனுக்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பிரதி அமைச்சரை SLESA தலைவர் Lieutenant Colonel Ajith Siyambalapitiya (ஓய்வு) பரவேற்றத்துடன் வரவேற்றார். அதன் பின்னர் முன்னாள் படைவீரர்கள் இல்லத்தை சுற்றிப் பார்த்த பிரதி அமைச்சர் அங்குள்ள முன்னாள் போர் வீரர்களுடன் சுமூகமாக உரையாடியதுடன் அவர்களின் நலனை விசாரித்து, அவர்களின் தேவைகள் தொடாபில் கேட்டறிந்தார். 

இதைத் தொடர்ந்து, முன்னாள் படைவீரர்களின் உழைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள விவசாய திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட இடத்தை பிரதி அமைச்சர் பார்வையிட்டார். திட்ட அதிகாரிகளுக்கு செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வழங்கிய அவர், இந்த முயற்சியை விரைவாகவும் உரிய தரநிலைகளுக்கு இணங்கவும் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் எனபது குறிப்பிடத்தக்கது.

மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) மற்றும் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், முன்னாள் படைவீரர் இல்லத்தில் வசிக்கும் போர்வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் முகண்கொடுக்கும் சவால்களை தெரிவித்ததுடன் இதற்கு தீர்வுகாணும் வலையில் ஒரு கட்டமைக்கப்பட்ட பொறிமுறையை உருவாக்குவதற்கான வழிமுறைகளை பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்.

வருகையை முடித்து, மேஜர் ஜெனரல் ஜெயசேகர (ஓய்வு) SLESA இன் நிர்வாகக் குழுவிற்கு தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் இணைக்கப்பட்ட சங்கங்களின் துணைக் குழுத் தலைவர்களுடன் ஒரு முறையான உரையை நிகழ்த்தினார். ஓய்வுபெற்ற போர்வீரர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற சேவையை அரசாங்கம் அங்கீகரிப்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் அவர்களின் நலனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் பாதுகாப்பு அமைச்சகம் உறுதியாக உள்ளது என்று உறுதியளித்தார்.

பிரதி அமைச்சர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற படைவீரர் சங்கத்தின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.