பொது தினத்தன்று யுத்த வீரர்கள் மற்றும் யுத்த வீரர்களின் குடும்பங்களின் தேவைகள் பாதுகாப்பு செயலாளரின் கவனத்திற்கு
ஜூலை 16, 2025யுத்த வீரர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பங்களின் நலனுக்கான அமைச்சின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (ஜூலை 16) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற பொது தின நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சி ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற வீரர்களுக்கும், மறைந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் அவர்களின் குறைகள் மற்றும் கவலைகளை நிவர்த்தி செய்வதற்ககு சந்தர்ப்பமளித்தது.
நிகழ்ச்சியின் போது, பாதுகாப்பு செயலாளர் அவர்களின் முறையீடுகளை பொறுமையாகக் கேட்டறிந்து எழுப்பப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சுஅதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அவர்களின் நல்வாழ்வு தொடர்பான நலன்புரித் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
யுத்த வீரர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அமைச்சின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.