--> -->

பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

ஜனவரி 05, 2021

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமொடோர் முஹம்மட் ஷபிஉல் பாரி பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (ஜனவரி, 05) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.