ரணஜயபுர படை வீரர் வீட்டுத்திட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை
ஜூலை 23, 2025இப்பலோகமை ரணஜயபுர ரணவிரு படைவீரர் வீட்டுத் திட்டத்தில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் வியாழக்கிழமை (ஜூலை 17) கூட்டமொன்று நடைபெற்றது. ஓய்வுபெற்ற, ஊனமுற்ற மற்றும் சேவையில் உள்ள முப்படை உறுப்பினர்கள் உட்பட குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு ஒரு குழுவை நியமிப்பதை நோக்கமாக்க கொண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தின் போது, பாதுகாப்பு சேவைகள் மேலதிக செயலாளர் சமன் திசாநாயக்க, இவ்வீட்டுத் திட்டம் நிறுவப்பட்டதிலிருந்து இதுவரை எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவான விளக்கத்தை வழங்கினார்.
2009 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட ரணஜயபுர முப்படையினருக்கான வீட்டுத் திட்ட தொகுதி, இப்பலோகமை பிரதேச செயலகத்தின் கீழ் 180 ஏக்கர் நிலப்பரப்பளவில் நிறுவப்பட்டது. இங்கு 1,509 வீடுகள் உள்ளத்துடன் தற்போது கிட்டத்தட்ட 7,000 குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர். படை வீரர்களை கௌரவிப்பதற்கும் ஆதரிப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட இந்த வளாகத்தில், நடைபாதை சாலைகள், வடிகால் அமைப்பு மற்றும் பாடசாலைகள், பாலர்பாடசாலைகள், பகல்நேர பராமரிப்பு மையங்கள், சுகாதார மையங்கள், கடைகள், வங்கிகள் மற்றும் குழாய் நீர் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் அமையப்பெற்றுள்ளன.
தற்போழுது நிலவும் பிரச்சினைகலில் குடியாளர் அற்ற வீடுகள் பராமரிக்கப்படாமை, படுதடைந்துவரும் யானை வேலி, பொலிஸ் நிலையத்தில் நிலவும் தேவைகள், இராணுவ சேவா வனிதா பிரிவினால் நிர்வகிக்கப்படும் பாலர் பாடசாலையில் உள்ள மீட்டர் அளவீடுகளில் ஒழுங்கற்ற பயன்பாட்டு மற்றும் திண்ம கழிவு அகற்றல் தொடர்பில் நிலவும் குறைப்பு[ஆடுகள் குறித்து பிரதி அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது. தரமற்ற வடிகால் மற்றும் பாதைகள், நிலம் மற்றும் வீட்டு உரிமை பரிமாற்றங்கள் தொடர்பான தீர்க்கப்படாத விடயங்கள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள், இயலாமை கொடுப்பனவுகள் மற்றும் படை வீரர்களின் உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் தொடர்பான குறைகல் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டன.
படை வீரர்களின் நல்வாழ்வில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தி, மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) தொடர்புடையவர்களுக்கு உடனடி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். தேசத்திற்கு சேவை செய்தவர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், அவர்களின் வாழ்க்கை நிலைமைகள் அவர்கள் உரிய மரியாதையைப் பிரதிபலிக்கும் என்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
படை வீரர்களுக்கான ஒரு முன்மாதிரி சமூகமாக ரணஜயபுர வீட்டு திட்ட வளாகத்தை மீட்டெடுப்பதற்கும் புத்துயிர் அளிப்பதற்கும் இந்த கூட்டம் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். புதிதாக முன்மொழியப்பட்ட குழு, தீர்வுகளை கண்டறிந்து பெற்றுக்கொடுப்பதற்கம் குடியிருப்பாளர்களின் ஒருமைப்பாடு மற்றும் நலனை நிலைநிறுத்துவதற்கும் உள்ளூர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.