ஆசிய ஆயத்தநிலை கூட்டுமுயற்சி செயலமர்வில் பிராந்திய மீள்தன்மை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தினார்

ஜூலை 24, 2025

கொழும்பி Cinnamon Life at the City of Dreams இல் புத்தாள்கிழமை (ஜூலை 23) நடைபெற்ற ஆசிய ஆயத்தநிலை கூட்டுமுயற்சி (Asian Preparedness Partnership (APP) செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) சிறப்பு உரை நிகழ்த்தினார்.

“நிலையான ஒத்துழைப்பு: தேசிய ஆயத்தநிலை கூட்டாண்மைகளின் எதிர்காலத்தை மேம்படுத்துதல்” (Sustaining Collaboration: Advancing the Future of National Preparedness Partnerships) எனும் தலைப்பின் கீழ் நடைபெறும் இந்த இரண்டு நாள் செயலமர்வில், கம்போடியா, லாவோஸ், மியான்மார், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகிய ஏழு ஆசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை கலந்துக் கொள்கின்றனர்.

2016 ஆம் ஆண்டு ஆரபிபிக்கப்பட்டதிலிருந்து அதன் சேவைக்காக  APP ஐப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர், நிலையான, தேசிய அளவில் பிரத்தியேகமான அனர்த்த தயார்நிலை அமைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் சமூக அடிப்படையிலான நடவடிக்கைகளை வலுப்படுத்த அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையை திறம்பட இணைத்துள்ள Sri Lanka Preparedness Partnership (SLPP) மூலம் இலங்கையின் அனுபவத்தை அவர் எடுத்துரைத்தார்.

தேசிய பாதுகாப்பில் அனர்த்த அபாயக் குறைப்பு மற்றும் காலநிலை மீள்தன்மையின் முக்கிய பங்கையும் பாதுகாப்பு செயலாளர் எடுத்துரைத்தார், இயற்கை மற்றும் மனித நடவடிக்கைகளினால்  உருவாக்கப்பட்ட அனர்த்தங்கள் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்துகின்றன என்பதைக் குறிப்பிட்டார்.

நமது மூன்று இணைத் தலைமாய் நிறுவனங்களான Disaster Management Centre, Janathakshan GTE Ltd and the Ceylon Chamber of Commerce ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ், SLPP தேசிய அளவில் சொந்தமான, பல துறைகளைக் கொண்ட தளமாக உருவெடுத்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

ஆசிய அனர்த்த தயார்நிலை நிலையம் மற்றும் Bill & Melinda Gates Foundation க்கு நன்றி தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் , கூட்டாண்மைகளை மற்றும் யோசனைகளாக செயல்படுத்த ஏனைய  பங்கேற்கும் நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

ஆரம்ப நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) வரவேற்புரையாற்றினார். ஆசிய அனர்த்த தயார்நிலை நிலையத்தின் நிர்வாக இயக்குநர் Aslam Perwaiz மற்றும் கேட்ஸ் அறக்கட்டளையின் அவசரகால பதிலளிப்பு பிரதி இயக்குநர்Dr. Valerie Berno ஆகியோர் தொடக்க உரைகளை நிகழ்த்தினர்.

இந்தப் செயலமர்வு, பிராந்திய ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதையும், பாதுகாப்பான மற்றும் மீள்தன்மை கொண்ட ஆசியாவிற்கான உத்திகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.