ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சில்
நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு

ஜூலை 30, 2025

இலங்கையின் வலுப்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜூலை 30) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா (ஓய்வு) அவர்களின் வழிகாட்டலின் கீழுள்ள உள் விவகாரப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) கொமிஷனர் ஜெனரலும், உயர் நீதிமன்ற நீதிபதியுமான திரு. ரங்க திசாநாயக்க இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டம் பற்றிய சுருக்கமான கண்ணோட்டத்தை திரு. திசாநாயக்க தனது சொற்பொழிவின் போது வழங்கினார்.

பொது சேவைக்கான அதன் முக்கிய விதிகள் மற்றும் தாக்கங்களை வலியுறுத்தினார். உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதில் நேர்மை மற்றும் நல்ல நம்பிக்கையுடன் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார், மேலும் பொது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் பணியில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலைப் பேணுவதற்கு பயப்பட வேண்டாம் என்றும் ஊக்குவித்தார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகர (ஓய்வு) இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் முப்படை தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள், சிரேஷ்ட உதவி செயலாளர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த முயற்சி, தூய்மையான நிர்வாகத்தை நிலைநிறுத்துவதற்கும், பாதுகாப்புத் துறையிலும், பரந்த நிர்வாகத்திலும் ஊழலுக்கு சகிப்புத்தன்மை இல்லாத கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் அமைச்சின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.