பொது தினத்தில் படை வீரர்களின் நலனுக்கான உறுதிப்பாட்டை பாதுகாப்பு
செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார்
ஆகஸ்ட் 01, 2025
படை வீரர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பங்களின் நலன்புரி வசதிகள் தொடர்பில் அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு அமைச்சு இன்று (ஆகஸ்ட்01) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயாகொந்தா (ஓய்வு) தலைமையில் அமைச்சு வளாகத்தில் பொது தின நிகழ்ச்சியை நடைபெற்றது.
பாதுகாப்பு செயலாளர் ஒவ்வொரு பங்கேற்பாளருடனும் தனிப்பட்ட முறையில் கதைத்து, அவர்களின் பிரச்சினைகளை பொறுமையாகக் கேட்டறிந்தார். எழுப்பப்பட்ட விஷயங்களை நிவர்த்தி செய்வதற்கும் நடைமுறை தீர்வுகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் உடனடி மற்றும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்தவர்களுக்கு மரியாதை செலுத்துமுகமாக அவர்களுக்கான நலன்புரி முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
படை வீரர்கள் மற்றும் மறைந்த வீரர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அமைச்சின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இந் நிகழ்ச்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.