மனித-யானை மோதல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டம்
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்றது

ஆகஸ்ட் 12, 2025

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் மனித-யானை மோதல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (ஆகஸ்ட் 12) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. அதிகரித்து வரும் மனித-யானை மோதலைத் தணிப்பதற்கான தற்போதைய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

காட்டு யானைகளால் விவசாய நிலங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்படும் சேதங்களை நிவர்த்தி செய்வதல், கிராமங்கலுக்குள் நுழையும் யானைகளை பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களுக்கு மாற்றுவது, நிகழ்நேர கண்காணிப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த விசேட யானை வேலிகளை நிறுவுதல் மற்றும் மனித-யானை சகவாழ்வை தொடர்பான சமூக விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன் நிலையான செயல் திட்டமொன்றை உருவாக்குவதற்கான தேவையும் வலியுறுத்தப்பட்டது.

இந்நடவடிக்கைகளில் முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையின் பங்களிப்புகளும் இதன்போது பாராட்டுக்குட்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் முப்படை அதிகாரிகள், பொலிஸ் , சிவில் பாதுகாப்புத் திணைக்கள, விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பொது நிர்வாக அமைச்சு, மகாவலி அதிகாரசபை, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை, வனவிலங்கு பாதுகாப்புத் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.