பொது தினத்தில் ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் படைவீரர்
குடும்பங்களின் நலனில் கவனம் செலுத்தபட்டது
ஆகஸ்ட் 13, 2025
ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்கான பாதுகாப்பு அமைச்சின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், பொது தின நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 13) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.
இதன் மூலம், ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற போர் வீரர்கள் மற்றும் மறைந்த படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் போது, பாதுகாப்பு செயலாளர் அவர்கள் எழுப்பிய முறையீடுகள் மற்றும் பிரச்சினைகளை கவனமாகக் கேட்டறிந்தார், மேலும் அவற்றை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வு தொடர்பான நலன்புரி திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த மற்றும் ஓய்வுபெற்ற போர் வீரர்களின் வாழ்க்கைத் தரத்தையும், வீரமிக்க போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுவது குறிப்பிடத்தக்கது.