இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) பிரதிநிதிகள் குழு
பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தது

செப்டம்பர் 01, 2025

மேஜர் ஜெனரல் பவன்பால் சிங் தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) பிரதிநிதிகள் குழு இன்று (செப்டம்பர் 01) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தது.

இந்த விஜயத்தின் போது, ​​இலங்கைக்கு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் அடங்கிய குழுவினர், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தனர். பாதுகாப்புச் செயலாளர் வருகை தந்த குழுவினரை அன்புடன் வரவேற்று, பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரி மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகருமான கெப்டன் ஆனந்த் முகுந்தனும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.