பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வையில் நீலகிரி விகாரை
புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன
செப்டம்பர் 08, 2025
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள லாகுகல தேசிய பூங்காவின் இந்த வரலாற்று சிறப்புமிக்க விகாரை அமைந்துள்ளது.
போரின் போது இப்பகுதியில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பல ஆண்டுகளாக கவனிப்பாரற்றுக் கிடந்த நீலகிரி விகாரையின் புனரமைப்பு பணிகள் ஜனவரி 16, 2022 அன்று பாதுகாப்பு அமைச்சின் தலைமையிலும், தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையிலும் ஆரம்பிக்கப்பட்டன. தேவையான நிதி பங்களிப்பு நா உயன ஆரண்ய சேனாசனத்தின் தலைமையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பௌத்தர்களால் வழங்கப்படுகிறது, கட்டுமானப் பணிகள் இலங்கை விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் திணைக்கள உறுப்பினர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள தீகவாபி ஸ்தூபிக்கு அடுத்து மிகப்பெரிய ஸ்தூபியான இதன் வரலாற்றை ஆராயும்போது, இந்த பெயரில் கட்டப்பட்ட ஒரு ஸ்தூபி பற்றிய சரியான தகவல்கள் இந்த நாட்டின் வரலாற்று ஆதாரங்களில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை, ஆனால் இது மகாதாதிக மகாநாக மன்னரால் கட்டப்பட்ட பாஷாண தீபிகா விஹாரை என்றும், பண்டைய ரோஹன இராச்சியத்தைச் சேர்ந்த இந்த ஸ்தூபி, காவந்திஸ்ஸ மன்னரால் கட்டப்பட்ட மகா நுக்கல ஸ்தூபி என்றும் இன்னுமொரு கருத்தும் நிலவுகிறது.
மேலும், கிமு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டின் படி, "விய ஹாவிய" என்ற நபர் ஆரியவம்ச சுத்த பிரசங்கத்தை வழங்குவதற்காக குலபரிய மகா விஹாரைக்கு 20 கஹவனுகளை (பண்டைய கால நாணயம்) நன்கொடையாக வழங்கியதாகக் கூறப்படுகிறது, மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள "குல பரிய மகா விஹாரை" என்ற பெயர் கடந்த காலத்தில் நீலகிரி ஸ்தூபிக்கு வழங்கப்பட்ட புனைப்பெயர் என்றும் ஊகிக்கப்படுகிறது.
மேலும், இந்த வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது, மகா அரஹத்களின் நினைவுச்சின்னங்கள் என நம்பப்படும் ஏராளமான நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இந்த இடம் தொல்பொருள் ரீதியாகவும் மத ரீதியாகவும் ஒரு முக்கியமான இடம் என்பதற்கான சான்றுகள் வெளிவந்துள்ளன.
கட்டுமானத்தின் முடிவில் 215 அடி உயரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நீலகிரி விகாரையின் புனரமைப்புப் பணிகளை முடிக்க 5,145,000 செங்கற்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புனரமைப்புப் பணிகளை இலங்கை விமானப்படை பொறுப்பேற்ற போது, அதன் உயரம் சுமார் 22 அடியாக இருந்தது, அத்துடன் அதன் தற்போதைய உயரம் சுமார் 51 அடி 5 அங்குலமாகும்.
நீலகிரி விகாரையின் புனரமைப்புப் பணிகள் விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த 150 பணியாளர்களின் முழு பங்கேற்புடன் மேற்கொள்ளப்படுகிறது மேலும் அனைத்து கட்டுமானப் பணிகளும் பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.