கலாவெவ குளத்தில் படர்ந்துள்ள தாவரங்களை அகற்ற
இலங்கை இராணுவம் உதவி

செப்டம்பர் 08, 2025

"தூய இலங்கை" திட்டத்திற்கு இணையாக, வைல்ட் டஸ்கர்ஸ் அமைப்புடன் இணைந்து, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 212 வது காலாட் பிரிகேட் பிரதேசத்திலுள்ள கலாவெவ குளத்தில் யானைகளின் வாழ்க்கை முறைக்கு தடையாக இருக்கும் படர்ந்துள்ள தாவர இனங்களை அகற்றுவதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

2025 செப்டம்பர் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம் 2025 செப்டம்பர் 05 ஆம் திகதி ஆரம்பமாகியது. இதன் போது அனுராதபுரத்தின் கலகம அருகே உள்ள கலாவெவ பிரதேசத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் படர்ந்திருந்த அகடன் மற்றும் ஜப்பானிய ஜபரா உள்ளிட்ட தாவரங்கள் அகற்றப்பட்டன. மீதமுள்ள அகற்றும் பணி 2025 செப்டம்பர் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் பலலுவெவ குளத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசனத் துறை, ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு இந்த திட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கியது.

நன்றி - www.army.lk